கார்பன் நடுநிலைமையை நோக்கிய மாற்றத்தினை மிகவும் விரைவுபடுத்துவதற்காக ஐக்கியப் பேரரசு-தமிழ்நாடு என்ற கூட்டாண்மையினைத் தொடங்குவதற்கு ஐக்கியப் பேரரசின் அரசாங்கமும் தமிழ்நாடு மாநில அரசாங்கமும் கூட்டு சேர்ந்துள்ளன.
இந்தக் கூட்டாண்மையானது, மாநில அரசின் கார்பன் நடுநிலைமையை நோக்கிய ஒரு மாற்றத்திற்காக ஈரோடு மற்றும் தூத்துக்குடி நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் போக்குவரத்து முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும்.
இரண்டு நகர்ப்புறப் போக்குவரத்துத் திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
இதில் முதல் திட்டமானது, “ஈரோடு நகரில் பருவநிலை தகவமைவு, நிலையான மற்றும் உள்ளடக்கிய வகையிலான நகர்ப்புறப் போக்குவரத்து” தொடர்பானதாகும்.
இதன் இரண்டாவது திட்டமானது தூத்துக்குடி நகரில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை இலக்காகக் கொண்ட “PACT-Digi-PULSE” திட்டமாகும்.
PACT-Digi-PULSE என்பது நகர்ப்புற வாழ்க்கை மற்றும் நிலையானச் சூழலுக்கான நேரடி அமைப்புகளின் எண்ணிம இரட்டை மாதிரி அடிப்படையிலான ஒரு திட்டமிடலைப் பயன்படுத்தி கார்பன் நடுநிலையை நோக்கிய மாற்றங்களை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டாண்மை என்பதைக் குறிக்கிறது.