TNPSC Thervupettagam

கார்பன் நடுநிலையைக் கொண்ட முதல் விமான நிலையம்

July 19 , 2022 733 days 519 0
  • லே விமான நிலையம் கார்பன் நடுநிலை கொண்ட ஒரு விமான நிலையமாக கட்டமைக்கப் படுகிறது.
  • இந்தியாவில் இது போன்ற விமான நிலையம் கட்டமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • புதிய விமான நிலைய முனையக் கட்டிடத்தில் வெப்பம் மற்றும் குளிரூட்டும் வசதிகளை வழங்குவதற்காக சூரியசக்தி ஒளி மின்னழுத்த ஆலையுடன் ஒரு "புவி வெப்ப அமைப்பு" வசதியும் இணைத்து இயக்கப்படும்.
  • இந்த அமைப்பு காற்று மற்றும் தரைப் பகுதிக்கு இடையில் வெப்பத்தைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் செயல்படுகிறது.
  • அதன் வெப்ப விசையியக்கக் குழாய்கள் பரப்புகளைச் சூடாக்குவதற்கும் குளிரூட்டச் செய்வதற்கும், அத்துடன் தண்ணீரைச் சூடாக்குவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்