TNPSC Thervupettagam

கார்பன் நானோ குழாய்களிலிருந்து மின்சாரம்

June 12 , 2021 1172 days 571 0
  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பொறியாளர்கள் கார்பன் நானோ (நுண்) குழாய்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளனர்.
  • கார்பன் நானோ குழாய்களால் (நுண் குழாய்கள்) ஆன இந்தப் புதிய சாதனமானது தனது சுற்றுப்புறச் சூழலிலுள்ள ஆற்றலைச் சேகரித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வல்லமையைக் கொண்டது.
  • இந்த நுண்ணிய கார்பன் துகள்கள் அதனைச் சுற்றியுள்ள திரவத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் மின்னோட்டத்தை உருவாக்க இயலும்.
  • ஒரு கரிமக் கரைப்பான் எனும் வகையிலான இந்தத் திரவமானது நானோ நுண் துகள்களிலிருந்து மின்னோட்டத்தை உருவாக்கும் எலக்ட்ரான்களை ஈர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்