TNPSC Thervupettagam

கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டம், 2023

July 10 , 2023 379 days 255 0
  • உள்நாட்டிலேயே நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தியாவின் முதல் கார்பன் (கரிம) சந்தையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ‘கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டம்-2023’ ஆனது முதலில் 2001 ஆம் ஆண்டு எரிசக்திப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.
  • இது நாட்டில் கார்பன் மதிப்பு வர்த்தகச் சந்தையை அமைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில், “தேசிய வழிகாட்டுதல் குழு, ஒரு தொழில்நுட்பக் குழு, அங்கீகாரம் பெற்ற கார்பன் சரிபார்ப்பு முகமை மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஆகியவை கார்பன் சந்தைக் கட்டுப்பாட்டாளராக உருவாக்கப்பட உள்ளன.
  • இந்தியக் கட்டமைப்பு கட்டுப்பாட்டகம் ஆனது இந்திய கார்பன் சந்தைக்கானப் பதிவு அமைப்பாக இருக்கும்.
  • கார்பன் சந்தையின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் வழி காட்டுதல்களை உருவாக்குவதற்கானப் பொறுப்பு வழிகாட்டுதல் குழுவிடம் வழங்கப் பட்டுள்ளது.
  • நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கான இணக்கத்திற்குத் தொழில் நுட்பக் குழு பொறுப்பேற்கும்.
  • கார்பன் மதிப்புச் சான்றிதழ் வர்த்தகத்திற்கான தற்போதைய ஆற்றல் பரிமாற்றங்கள் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்