ஐரோப்பிய ஒன்றியமானது, BASIC அமைப்பின் உறுப்பினர் நாடுகள் எதிர்த்து வரும் கார்பன் வரம்பு சீரமைவு செயல்முறை என்ற கொள்கையை முன்மொழிந்துள்ளது.
கார்பன் வரம்பு சீரமைவு செயல்முறை (CBAM) என்பது அதிக கார்பன் கொண்ட பொருட்களின் இறக்குமதிகளால் வெளியாகும் கார்பன் கசிவினைத் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இதன் கீழ், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, அவற்றை உற்பத்தி செய்ய செலவிடப்படும் கார்பன் அளவின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இடையே நிலவும் சந்தை களத்தினைச் சமன் செய்வதற்காக இறக்குமதிகளுக்கு சமமானச் செலவினமானது வரியாக விதிக்கப்படுகிறது.
BASIC என்பது பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு புதிதாக தொழில்மயமாக்கப் பட்ட நாடுகளின் குழுவாகும்.