கார்பன் வெளிக் கொணர்தல் திட்டம் என்பது பல்வேறு நாடுகள் மற்றும் அந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கார்பன் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்படும் ஒரு வருடாந்திர அறிக்கை ஆகும்.
இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான குளோபல் ரிப்போர்டிங் என்ற நிறுவனத்தின் முன்முயற்சியினால் (Global Reporting Initiative) வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின் படி, கார்பன் குறைப்பு தொடர்பான பெருநிறுவனப் பொறுப்புகளின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப் படுத்தப்பட்டன.
இந்திய நிறுவனங்களிடையே, இன்போசிஸ், டால்மியா சிமெண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வை மேற்கொண்டுள்ளன.
இந்தப் பட்டியலில் 135 நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் 83 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே முறையே ஐக்கிய ராஜ்ஜியம் (78), பிரான்சு (51), இந்தியா (38) ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.