டெல்லி மெட்ரோ இரயில் கழகமானது, கார்பன்லைட் மெட்ரோ இரயில் பயணம் என்ற முதன்மையான முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
மெட்ரோ இரயில்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் பயணிகளின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைப் பற்றி அவர்கள் அறியச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
டெல்லி மெட்ரோ இரயிலில் தினசரிப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்களின் மெட்ரோ பயணத்தின் மூலம் சராசரி கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுக் குறைப்பில் அவர்களின் பங்கு பற்றி இந்தப் பயணத்தின் போது அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.