TNPSC Thervupettagam

காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கி ஒப்படைப்பு அபியான் முன்னெடுப்பு

November 19 , 2023 243 days 165 0
  • அருணாச்சலப் பிரதேச மாநில அரசின் காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கி ஒப்படைப்பு அபியான் முன்னெடுப்பு ஆனது, யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் மாநாட்டில் வனவிலங்குப் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் சிறந்த வெற்றிக் கதையாகச் சமர்ப்பிப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
  • காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கி ஒப்படைப்பு அபியான் என்பது அம்மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் ஒரு பெரும் முன்னெடுப்பு ஆகும்.
  • இத்திட்டத்தின் கீழ், பறவைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளைக் கொல்ல இந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக மக்கள் தங்கள் காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கிகள் மற்றும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தானாக முன்வந்து ஒப்படைக்குமாறு கோரப்பட்டனர்.
  • இந்த திட்டம் ஆனது, 2021 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்