காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம்
October 13 , 2022
777 days
571
- இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் நிறுவப்பட்டுள்ளது.
- இது மிகப்பெரிய உற்பத்தித் திறன் கொண்ட ஒற்றை அலகைக் கொண்டது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதகமான ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகில் வடலிவிளை உள்ளது.
- இதுவரை, ஆரல்வாய்மொழிக் கணவாயில் நிறுவப்பட்டுள்ள 3,000 தனிக் காற்றாலை அமைப்புகள் 2 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
- 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இதில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் தலா 35 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது.
- குஜராத் மற்றும் தமிழ்நாடு இந்தப் பணியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
- 500 ஜிகாவாட்டில் சூரிய சக்தி 300 ஜிகாவாட் ஆகும்.
- தமிழகத்தில் தனுஷ்கோடியில் மட்டும் 30 ஜிகாவாட் மின்சாரம் உட்பட 35 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.
Post Views:
571