TNPSC Thervupettagam

காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான புதிய கொள்கை 2024

September 9 , 2024 27 days 83 0
  • காற்றாலை மின் திட்டங்களுக்கான 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் கால நீட்டிப்புக் கொள்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களை பழைய காற்றாலை விசையாழிகளை மாற்ற ஊக்குவிப்பது மற்றும் காற்றாலை ஆற்றல் வளங்களின் உகந்த முறையிலான பயன்பாட்டை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு மாநிலமானது 22,754 மெகாவாட் திறன் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது.
  • 1986 ஆம் ஆண்டில், சுமார் 55 கிலோவாட் முதல் 600 கிலோவாட் வரையிலான இயந்திர உற்பத்தித் திறன்களுடன் தமிழ்நாட்டில் காற்றாலை மின்னாற்றல் உற்பத்தியானது தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்