தமிழக மாநில அரசானது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ‘காற்றாலை மின் ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கான தமிழ்நாடு மீளுருவாக்க மற்றும் செயல்பாட்டுக் கால நீட்டிப்புக் கொள்கையை’ வெளியிட்டது.
இந்தப் புதிய கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டதன் மூலம், காற்றாலை ஆற்றல் உற்பத்தித் துறையில், குஜராத்திடம் இழந்த தனது முன்னணி நிலையை தமிழக மாநிலம் மீண்டும் பெற உள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி குஜராத்தில் உள்ள நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 11,176.12 மெகாவாட் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 10,377.97 மெகாவாட்டாக இருந்தது.
மீளுருவாக்கத் திட்டத்தின் கீழ், காற்றாலை ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் பழைய காற்றாலைகளுக்குப் பதிலாக புதியவற்றை நிறுவ உள்ளன.
இந்தியாவின் மொத்த காற்றாலை ஆற்றல் மீளுருவாக்கத் திறன் ஆனது 25,406 மெகா வாட்டாக உள்ள நிலையில் இதில் அதிகபட்சமாக தமிழகத்தின் பங்கு 7,387 மெகா வாட்டாக உள்ளது.