TNPSC Thervupettagam

காற்றின் தரம் குறித்த தரவுத் தளம் 2022

April 8 , 2022 836 days 451 0
  • உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு (ஏப்ரல் 7), உலக சுகாதார அமைப்பானது (WHO) 2022 ஆம் ஆண்டு காற்றின் தரம் குறித்த தரவுத் தளத்தை வெளியிட்டது.
  • கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மக்களும் (99%) உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர வரம்புகளை மீறிய காற்றையேச் சுவாசிப்பதாக இது காட்டுகிறது.
  • உலக சுகாதார அமைப்பானது முதல் முறையாக நைட்ரஜன் டை ஆக்சைட்டின் (NO2) வருடாந்திரச் சராசரிச் செறிவுகளின் நிலமட்ட அளவீடுகளையும் எடுத்துள்ளது.
  • 10 μm (PM10) அல்லது 2.5 μm (PM2.5) என்ற மதிப்பிற்குச் சமமான அல்லது அதை விடச் சிறிய விட்டம் கொண்ட துகள்களின் அளவீடுகளும் இதில் அடங்கும்.
  • "கிழக்கு மத்தியத் தரைக் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் மிகவும் மோசமாகவும், அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக"  இந்த அறிக்கை கூறுகிறது.
  • கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதியில் அதிக செறிவுமிக்க நைட்ரஜன் டை ஆக்சைடு காணப் பட்டது.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய  நாடுகளில் உள்ள 1 சதவீதத்திற்கும் குறைவான நகரங்களில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரை செய்யப் பட்ட வரம்புகளுக்கு இணங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்