காற்று மற்றும் சூரியசக்தித் திட்டங்களை ஒரே இடத்தில் நிறுவுவதற்காக குஜராத் அரசு காற்று-சூரியசக்தி கலப்பு செயல்திட்டம் 2018-ஐ அறிவித்துள்ளது.
இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
இச்செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமானது நிலம் மற்றும் மின் விநியோகக் கம்பிகளின் உகந்த பயன்பாட்டினை உருவாக்குவதாகும்.
இந்த செயல் திட்டம் ஏற்கனவே நடப்பில் உள்ள சூரிய சக்தி திட்ட நிலத்தினை காற்று மற்றும் சூரியசக்தி ஆற்றல் அலகுகளை அமைப்பதற்கு உபயோகிக்க அதன் மேம்பாட்டாளருக்கு உதவும்.