TNPSC Thervupettagam

காற்று தர மேலாண்மைப் பரிமாற்றத் தளம்

September 16 , 2024 68 days 103 0
  • பருவநிலை மற்றும் தூய்மையானக் காற்று கூட்டணி (CCAC) ஆனது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 6வது (UNEA-6) தீர்மானத்தை தொடர்ந்து காற்று தர மேலாண்மைப் பரிமாற்றத் தளத்தை (AQMx) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பிராந்தியக் கூட்டுறவினை அதிகரிப்பதையும், உலகளவில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் காற்றுத் தர வழிகாட்டுதல்கள் மற்றும் இடைக்கால இலக்குகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து நகர மற்றும் தேசிய காற்றுத் தர மேலாள அமைப்புகளுக்கு இந்த தளம் வழிகாட்டுதல்களை வழங்கும்.
  • காற்று மாசுபாடு ஆனது ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமான முன்கூட்டிய மரணங்களை ஏற்படுத்துகிறது குறிப்பாக ஏழ்மை நிறைந்த பகுதிகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள மக்களைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்