மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் காற்று மாசுக் கட்டுப்பாட்டு கருவி ‘வாயு’வை (WAYU) தொடங்கி வைத்தார். (Wind Augmentation PurifYing Unit-பெரிய அளவில் காற்றை சுத்திகரிக்கும் பிரிவு)
இந்த வாயுவானது (WAYU) டெல்லியின் ITO குறுக்கு சந்திப்பின் போக்குவரத்து சந்திப்பு மற்றும் முகர்பா சௌக் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
வாயுவானது அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழுமம் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (Council of Scientific and Industrial Research – National Environmental Engineering Research Institute : CSIR-NEERI) உருவாக்கப்பட்டுள்ளது.
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியுதவி அளிக்கப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.
இந்த கருவியானது காற்று மாசுபடுத்தியை நீர்த்தலுக்கான காற்று உருவாக்கம் மற்றும் செயல்பாட்டில் உள்ள மாசுபடுத்திகளை அகற்றுதல் ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறது.