டெல்லி முழுவதும் நிலவும் காற்று மாசுபாடு பிரச்சனையை எதிர்கொள்வதற்காக டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதிகளில் பனிப்புகை எதிர்ப்பு துப்பாக்கிகளை டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதனை செய்துள்ளது.
பனிப்புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் (Anti-Smog Guns) என்பது நுண் மூடுபனி நீர்த்திவலை (mist) தெளிப்பு பீரங்கிகளாகும்.
மழைபொழியும் போது, மழைத்துளிகளானது எவ்வாறு வளிமண்டலத்தில் நிலவுகின்ற காற்று மாசு மூட்டத்தின் நுண் தூசிகளை (particulates) தன்னோடு கொண்டு வந்து நிலத்தில் வீழ்படியச் செய்து மாசுபாட்டை மட்டப்படுத்துமோ அவ்வாறே இப்பீரங்கிகளால் பீய்ச்சப்படும் நீர்த்திவலைகளானது மாசின் தூசிகளோடு சேர்ந்து அவற்றை வளிமண்டலத்திலிருந்து நீக்கும்.