சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, காற்றுத் திட்டம் எனப் பெயரிடப்பட்ட குறைந்த விலையிலான இணைய உலகம் (IoT) அடிப்படையிலான இயக்க வகையிலான காற்று மாசுபாடு கண்காணிப்புக் கட்டமைப்பினை உருவாக்கி உள்ளது.
இது பேருந்துகள், மகிழுந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டு, தற்காலிகமான இடம் சார்ந்த மற்றும் நேரம் சார்ந்த வகையில் காற்றிற்கான தரத்தின் மீதான தரவுகள் இதன் மூலம் சேகரிக்கப் படுகின்றன.
இந்தச் சாதனங்கள் மூலம் சாலையின் கடினத்தன்மை, பள்ளங்கள் மற்றும் புற ஊதாக் குறியீடு ஆகியவற்றை மதிப்பிட முடியும்.