TNPSC Thervupettagam

காலநிலை அவசரநிலை - ஐரோப்பிய நாடாளுமன்றம்

November 30 , 2019 1825 days 676 0
  • அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளதன் காரணமாக ஐரோப்பிய நாடாளுமன்றம் உலகளாவிய "காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசர நிலையை” அறிவித்துள்ளது.
  • இது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பிரெஞ்சு தாராளவாதியான பாஸ்கல் கான்பின் என்பவர் வடிவமைத்த ஒரு தீர்மானம் ஆகும்.
  • இதன் மூலம் ஐரோப்பாவானது காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலையை பிரகடனப் படுத்திய ஒரு முதல் கண்டமாக மாறுகின்றது.
  • ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தத்தில் “2030 ஆம் ஆண்டளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் 55% குறைப்பு” என்ற இலக்கையும் சேர்க்குமாறு புதிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனையும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்