TNPSC Thervupettagam

காலநிலை உயர் இலட்சிய மாநாடு 2020

December 16 , 2020 1315 days 564 0
  • இந்த மாநாடானது பாரிஸ் ஒப்பந்தத்தின் 5வது ஆண்டைக் குறிப்பதற்காக ஐக்கிய நாடுகள், பிரான்சு மற்றும்  ஐக்கியப் பேரரசு ஆகியவற்றினால் இணைந்து நடத்தப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் காலநிலைச் சமநிலையை அடையும் வரை உறுப்பு நாடுகள் “காலநிலை அவசரச் சூழ்நிலையை” அறிவிக்குமாறு அந்நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனானது உலகில் 4வது மிகப் பெரியது என்றும் அது 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் அளவை எட்டும் என்றும் இந்தியப் பிரதமர்  அறிவித்துள்ளார்.
  • மேலும் அவர் இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனானது 45 ஜிகாவாட் என்ற அளவை எட்ட அதிக அளவிலான குறிக்கோள்களைக் கொண்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
  • இந்தியாவானது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடையும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
  • இந்தியாவானது தனது கார்பன் உமிழ்வு தீவிரத் தன்மையை 2005 ஆம் ஆண்டில் இருந்த நிலையை விட 21% என்ற அளவில் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்