TNPSC Thervupettagam

காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023

November 22 , 2022 732 days 855 0
  • ஜெர்மன் வாட்ச், புதிய காலநிலை நிறுவனம் மற்றும் காலநிலை நடவடிக்கை அமைப்பு ஆகிய மூன்று அரசு சாரா சுற்றுச்சூழல் நிறுவனங்களால் இது தொகுக்கப் பட்டுள்ளது.
  • இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 59 நாடுகளின் காலநிலைப் பாதுகாப்புச் செயல் திறனைக் கண்காணிப்பதற்கான ஒரு சுயாதீனமான கண்காணிப்புக் கருவிகும்
  • இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 59 நாடுகள் இணைந்து, உலகில் 92%க்கும் அதிகமான பசுமை இல்ல வாயுவை (GHG) வெளியேற்றியுள்ளன.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் உமிழ்வைப் பாதியாகக் குறைக்கச் செய்வதில் நாடுகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் இவை தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • "ஒட்டு மொத்தமாக மிக உயர்ந்த மதிப்பீட்டை அடைய எந்த நாடும் அனைத்துக் குறியீட்டு வகைகளிலும் போதுமான அளவு செயல்படவில்லை" என இந்த அறிக்கை முதல் 3 இடங்களை காலியாக விட்டுள்ளது.
  • நான்காவது இடத்தில் டென்மார்க் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் சிலி உள்ளன.
  • ஈரான், சவூதி அரேபியா மற்றும் கஜகஸ்தான் ஆகியவை மோசமாக இருந்தன.
  • 2023 அறிக்கையில், இந்தியா அதன் குறைந்த உமிழ்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அதிகரித்து வரும் பயன்பாடு காரணமாக இரண்டு இடங்கள் முன்னேறி 63 நாடுகளில் 8வது இடத்தைப் பிடித்தது.
  • இந்தியா தனது 2030 மாசு உமிழ்வு இலக்குகளைச் சந்திக்கும் "பாதையில்" இருப்பதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பாதை 2030 இலக்குக்கான பாதையில் இல்லை.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் மற்றும் ஆற்றல் பயன்பாடு வகைகளில் இந்தியா உயர் மதிப்பீட்டைப் பெற்றுள்ள நிலையில், அதே நேரத்தில் காலநிலைக் கொள்கை மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் பிரிவுகளில் நடுத்தர மதிப்பீட்டைப் பெற்றது.
  • கடந்த அறிக்கை முதல், இந்தியா அதன் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்பைப் புதுப்பித்து, 2070 ஆம் ஆண்டில் நிகரப் பூஜ்ஜிய இலக்கை எட்டும் என அறிவித்துள்ளது.
  • உலக நிலக்கரி உற்பத்தியில் 90%க்கு பொறுப்பான ஒன்பது நாடுகளில் இந்தியாவும் இருப்பதாகவும், 2030 ஆம் ஆண்டளவில் அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியை 5%க்கும் அதிகமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.
  • நிகர சுழியம் என்பது வளிமண்டலத்தில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களுக்கும் வெளியே எடுக்கப்பட்ட வாயுக்களுக்கும் இடையிலான சமநிலையை அடைவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்