காலநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு
December 13 , 2020
1448 days
621
- சமீபத்தில் புதிய காலநிலை நிறுவனம், ஜெர்மன் வாட்ச் மற்றும் கேன் (க்ளைமேட் ஆக்சன் நெட்வொர்க்) ஆகியவற்றால் இது வெளியிடப்பட்டது.
- இந்தக் குறியீடானது 2005 ஆம் ஆண்டு முதல், உலகின் ஐம்பத்தேழு பசுமைக்குடில் வாயுக்களை உமிழும் உமிழ்ப்பாளர்களை மதிப்பிடுகிறது.
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவற்றுடன் சேர்த்து இந்தியா, தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் 10 இடங்களில் உள்ளது.
- இந்தியா 2019 ஆண்டில் ஒன்பதாவது இடத்திலிருந்து ஓரிடம் சரிந்து இந்த ஆண்டு 10வது இடத்திற்கு வந்துள்ளது.
- ஜி 20 நாடுகளுள் இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே அதிகத் தரவரிசையில் உள்ளன.
- மற்ற எந்த நாடுகளும் முதல் மூன்று இடங்களில் இல்லை.
- இதற்குக் காரணம் 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் எந்த நாடும் போதுமானதாக இல்லாததால் தான் ஆகும்.
- சுவீடன் இதில் நான்காவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு, டென்மார்க், மொராக்கோ, நார்வே, மற்றும் சிலி உள்ளன.
- 61வது இடத்தைப் பெற்று அமெரிக்காவானது மிக மோசமான செயல்திறனைக் கொண்டுள்ளது.
Post Views:
621