பாதுகாப்பு மற்றும் காலநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குதல் பற்றி ஏழை நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதற்கான தளம் ஒன்றினை உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடங்கியுள்ளது.
இந்த இரு நிதி நிறுவனங்களும் ஏழை நாடுகளின் கடன் சுமையைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் காலநிலை மாற்றம் எனும் காரணியை முன்னெடுக்க இத்தளத்தினை உபயோகிக்கும்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி இரு உலகளாவியப் பிரச்சினைகள் உள்ளன.
அவையாவன
ஏழை நாடுகளின் அதிக கடன் சுமையை மறுசீரமைத்தல் (அ) குறைப்பதற்கான தேவை.
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருள்களின் மாசு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தேவை.
எனவே, காலநிலை மாற்றத்தை கடன் மறுசீரமைப்புச் செயல்பாடுகளில் சேர்ப்பது இவற்றைக் குறைப்பதற்கு ஊக்கமளிக்கும்.