TNPSC Thervupettagam

காலநிலை மாற்றம் குறித்த இந்திய சிஇஓ மன்றம்

November 7 , 2020 1484 days 765 0
  • இந்த மன்றத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தலைமை வகித்தார்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க  ஆற்றலின் மூலம் 450 ஜிகாவாட் மின் உற்பத்தியை அடையும் இந்தியாவின் இலக்கையும் ஜவ்டேகர் சுட்டிக் காட்டினார்.
  • இந்தியாவின் தலா தனி நபர் கரிம உமிழ்வுகளானது மிகவும் குறைவாக உள்ளது.
  • வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடப் படுகையில் இந்தியாவானது உமிழ்வுகளை வெளியிடுவதில் குறைந்த அளவு பங்களிப்பையே அளித்து இருக்கின்றது.
  • இந்தியாவானது கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதற்காக பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை அறிவித்துள்ளது.
  • இந்தியாவானது தனது உமிழ்வுச் செறிவை 35% என்ற அளவிற்குக் குறைக்கவுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு வாக்கில் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத் தக்க ஆற்றலையும் 100 ஜிகாவாட் சூரிய ஒளி ஆற்றலையும் பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்