TNPSC Thervupettagam

காலநிலை மாற்றம் தொடர்பான 29வது BASIC அமைச்சரவைக் கூட்டம்

November 5 , 2019 1720 days 569 0
  • காலநிலை மாற்றம் குறித்த BASIC (பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா) நாடுகளின் 29வது அமைச்சரவைக் கூட்டமானது சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
  • 2020 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிப்படையான மற்றும் மானிய அடிப்படையிலான முறையில் வழங்குவதற்காக காலநிலை நிதிக்கான பொறுப்புகளை நிறைவேற்றுமாறு வளர்ந்த நாடுகளை அமைச்சரவைக் கூட்டமானது கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்தியா 30வது BASIC அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளது.

BASIC பற்றி

  • BASIC நாடுகள் என்பவை புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நான்கு பெரிய நாடுகளான பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒரு குழுமமாகும்.
  • அவர்களின் பொதுவான குறைந்தபட்ச தேவை வளர்ந்த நாடுகளால் பூர்த்தி செய்யப்படா விட்டால் ஒன்றுபட்டு வெளிநடப்பு செய்வது உட்பட, கூட்டாகச் சேர்ந்து  செயல்பட 2009 ஆம் ஆண்டின் கோபன்ஹேகன் காலநிலை உச்சி மாநாட்டில் இந்த நான்கு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்