உலக வானிலை அமைப்பானது காலநிலைச் சேவைகள் 2020 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 13 அன்று பேரிடர் அபாயக் குறைப்புக்கான பன்னாட்டு நாளை முன்னிட்டு இது வெளியிடப் பட்டது.
சிறப்பம்சங்கள்
மூன்று பேரில் ஒருவர் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு முறைகளால் (Early warning systems) போதுமான பாதுகாப்புடன் இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில், 11,000க்கும் மேற்பட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.மேலும் இவை வானிலை, காலநிலை மற்றும் நீர் தொடர்பான ஆபத்துகளை ஏற்படுத்தி உள்ளன.
இதில் 2 மில்லியன் உயிரிழப்புகள் மற்றும் 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்புகள் உள்ளடங்கும்.
2030 ஆம் ஆண்டு வாக்கில் பன்னாட்டு மனிதாபிமான முறையை (international humanitarian system) எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 50% அதிகரிக்கும்.
உலக வானிலை அமைப்பு
இந்த அமைப்பானது 1873 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பன்னாட்டு வானிலை அமைப்பின் (International Meteorological Organization) கீழ் நிறுவப்பட்டது.
1947 ஆம் ஆண்டின் உலக வானிலை ஒப்பந்தமானது முறையாக உலக வானிலை அமைப்பை நிறுவியது.
உலக வானிலை அமைப்பானது 193 நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். மேலும் இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
இது வளிமண்டல அறிவியல், நீர்நிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் தொடர்பான பன்னாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பொறுப்பை உடையது.