காலா அசார் (அ) டம் டம் காய்ச்சல் (அ) கருங்காய்ச்சல்
August 21 , 2017 2685 days 2891 0
காலா அசார் நோய் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஒட்டுண்ணிக் கொல்லி ஆகும் .முதலாவது பெரிய ஒட்டுண்ணிக்கொல்லி மலேரியா ஆகும்.
காலா அசார் என்றழைக்கப்படும் ‘விஸ்செரல் லீ ஷ்மேனியாசிஸ்’ (Visceral leishmaniasis- VL) ஆனது லீஷ்மேனியாசிஸின் (leishmaniasis) மிகவும் கொடிய வடிவம் ஆகும்.
லீஷ்மேனியா புரோட்டாசோவா ஒட்டுண்ணிகளின் காரணமாக லீஷ்மேனியாசிஸ் ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் மணல் கொசுக்கள் (Sandflies) மூலமாக மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது
இது மனிதர்களுக்கு மட்டுமே பாதிப்பினை ஏற்படுத்துகிறது , பிற விலங்கு இனங்களை பாதிப்பதில்லை
இதன் அறிகுறிகள் : தொடர்ந்து காய்ச்சல், எடைகுறைவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், மற்றும் ரத்த சோகை
இந்த ஒட்டுண்ணிகள் மனித உள்ளுறுப்புகளுக்குள் ஊடுருவி கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையினை பாதிப்படையச் செய்கிறது. இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் மரணம் ஏற்படும்.
ஆர்.கே.39 போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் ஒட்டுண்ணிகள் மனிதனின் உடலில் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.
பீகார். ஜார்க்கண்ட், உத்திரப்பிரேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இந்நோய் காணப்படுகிறது.