TNPSC Thervupettagam

காலேஷ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டம்

October 29 , 2020 1398 days 591 0
  • அப்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் பிரானஹிதா-செவெல்லா திட்டம் என்று அழைக்கப் பட்ட இத்திட்டம் 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் மறுவடிவமாக்கப் பட்டு, நீட்டிக்கப்பட்டு காலேஷ்வரம் திட்டம் என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • இது கோதாவரி நதியின் வெள்ள நீரைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் தெலுங்கானாவை ஒரு வறட்சியற்ற மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது பிரானஹிதா நதி மற்றும் கோதாவரி நதி இரண்டும்  சங்கமிக்கும் இடத்தில் தொடங்குகின்றது.
  • இத்திட்டம் நிறைவு பெற்றால், இது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன மற்றும் குடிநீர் திட்டமாக இருக்கும்.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது (National Green Tribunal - NGT) “சட்டத்தை மீறிய வகையில் இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • அதற்கான அனுமதியானது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் கணிசமான பணிகள் முடிக்கப்பட்ட பின்பு வழங்கப்பட்டுள்ளது.  
  • இந்தத் தீர்ப்பானது NGTயின் தலைவரான நீதியரசர் ஆதர்ஷ் குமார் கோயல் அவர்களின் தலைமையிலான ஒரு அமர்வினால் வழங்கப்பட்டுள்ளது.

பின்னணி

  • காகத்தியா திட்டம் என்பது தெலுங்கானா அரசின் ஒரு முதன்மைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது அம்மாநிலத்தில் சிறு & குறு விவசாயிகளுக்குப் உதவும் வகையில் நீர்ச் சேமிப்பு அமைப்புகளைப் புனரமைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பாகீரதா என்ற ஒரு திட்டமானது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் அனைத்துக் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பான குடிநீர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்