TNPSC Thervupettagam

காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் – சுற்றுச்சூழல் ஒப்புதல்

December 21 , 2017 2531 days 938 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு  (Expert Appraisal Committee) தெலுங்கானா மாநிலத்தின் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு  இசைவு  வழங்கியுள்ளது.
  • ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதற்காக கோதாவரி நதியின் குறுக்கே காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் தெலுங்கானாவின் மடிகாட்டா கிராமத்தின் அருகில் தன் துணைநதியான பிரானாஹிட்டாவோடு கோதாவரி நதி சங்கமிக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
  • பெரும்பரப்பிலான பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் மூழ்க உள்ளதாயினும், இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி (Environment Clearence) வழங்கியுள்ள மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழுவானது நீர்ப்பாசன திட்டத்தினால் இத்திட்டப் பகுதிகளில் ஏற்பட உள்ள நுண் – கால நிலை மாற்றங்களில் (micro-climatic conditions) கவனம் கொள்ளுமாறு தெலுங்கானா அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.
  • பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் 2007-ல் முன் மொழியப்பட்ட பிரானஹிட்டா – செவ்வெல்லா ஏற்றுப் பாசன (Lift Irrigation) திட்டத்தின் மறு வடிவமைப்பு பதிப்பே காலேஷ்வரம் நீர்ப்பாசனத் திட்டமாகும்.
  • எல்லம்பள்ளி அணைக்கட்டிலிருந்து மல்லனசாகர் நீர்த்தேக்கம் வரை இத்திட்டத்தின் கீழ் 81 km நீளமுள்ள சுரங்க நீர் வழிப்பாதை (tunnel) அமைக்கப்பட உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டால் இது தான் ஆசியாவின் மிக நீண்ட நீர் கொண்டு செல்லும் சுரங்கப் பாதையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்