முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று, இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 15.75 லட்சம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் விரிவு படுத்தப் பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.