TNPSC Thervupettagam

கால்சியம்-41 கதிரியக்க கரிம காலக் கணிப்பு

May 26 , 2023 551 days 304 0
  • கதிரியக்க கரிம காலக் கணிப்பானது 1947 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது முதல் ஒரு கரிமப் பொருள் எவ்வளவு கார்பன்-14 என்பதினைக் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அதன் காலத்தினைக் கணக்கிடுவதற்கு அறிவியலாளர்களுக்கு உதவி வருகிறது.
  • கார்பன்-14 என்ற கூறின் அரை ஆயுட்காலம் 5,700 ஆண்டுகள் ஆகும்.
  • எனவே, சுமார் 50,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்களின் காலத்தினை இந்த நுட்பத்தின் மூலம் தீர்மானிக்க முடியாது.
  • 1979 ஆம் ஆண்டில், அதற்குப் பதிலாக 99,400 ஆண்டுகள் அரை ஆயுட்காலம் கொண்ட கால்சியம்-41 என்ற கூறினை இதற்காகப் பயன்படுத்துவதற்கு என்று அறிவியலாளர்கள் பரிந்துரைத்தனர்.
  • சுமார் 10^15 கால்சியம் அணுக்களுள் ஒன்றில் உருவாகின்ற கால்சியம்-41 மிக அரிதான வகையிலான ஒன்றாகும்.
  • கடல்நீரில் 12% அளவிலான துல்லியத்துடன், ஒவ்வொரு 10^16 கால்சியம் அணுக்களிலும் ஒரு கால்சியம்-41 அணுவை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்