கதிரியக்க கரிம காலக் கணிப்பானது 1947 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது முதல் ஒரு கரிமப் பொருள் எவ்வளவு கார்பன்-14 என்பதினைக் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அதன் காலத்தினைக் கணக்கிடுவதற்கு அறிவியலாளர்களுக்கு உதவி வருகிறது.
கார்பன்-14 என்ற கூறின் அரை ஆயுட்காலம் 5,700 ஆண்டுகள் ஆகும்.
எனவே, சுமார் 50,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்களின் காலத்தினை இந்த நுட்பத்தின் மூலம் தீர்மானிக்க முடியாது.
1979 ஆம் ஆண்டில், அதற்குப் பதிலாக 99,400 ஆண்டுகள் அரை ஆயுட்காலம் கொண்ட கால்சியம்-41 என்ற கூறினை இதற்காகப் பயன்படுத்துவதற்கு என்று அறிவியலாளர்கள் பரிந்துரைத்தனர்.
சுமார் 10^15 கால்சியம் அணுக்களுள் ஒன்றில் உருவாகின்ற கால்சியம்-41 மிக அரிதான வகையிலான ஒன்றாகும்.
கடல்நீரில் 12% அளவிலான துல்லியத்துடன், ஒவ்வொரு 10^16 கால்சியம் அணுக்களிலும் ஒரு கால்சியம்-41 அணுவை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடிந்தது.