TNPSC Thervupettagam

கால்நடை நோய்களுக்கான முன்னெச்சரிப்பு செயலி

December 30 , 2017 2392 days 826 0
  • கால்நடை நோய்களைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்காக “LDF கைபேசி செயலி” எனும் செயலியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR – Indian Council for Agriculture Research) கால்நடை நோயியல் மற்றும் நோய் தகவலியல் தேசிய நிறுவனத்தினால் (National Institute of Vertinary Epidomology and Disease Informatics - NIVEDI) இச்செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இக்கைபேசி செயலி மூலம் கால்நடை நோய்கள் பற்றி முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் (early diseases warning) பெறலாம். மேலும் கால்நடை நோய்த்தொற்றுகளின் போது அவற்றின் நோயறிதலுக்கான மருத்துவ மாதிரிகள் பற்றிய தகவல்களையும் பெற இயலும். அதனால் நோய்த்தொற்று காலத்தில் வேண்டிய மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள இயலும்.
  • ICAR – NIVEDI ஆராய்ச்சி நிறுவனமானது, கடந்த காலத்திய நோய்த்தொற்று நிகழ்வுகளின் அடிப்படையில் 13 முன்னணி கால்நடை நோய்களை அடையாளம் கண்டு அவற்றிற்கான வலுவான தரவுதளத்தை இச்செயலியில் கட்டமைத்துள்ளது.
  • காலநிலை காரணிகள் (Clinatic Factors) மற்றும் காலநிலை அல்லாத காரணிகள் (Non-Clinatic Factors)   ஆகியவற்றின் அடிப்படையில் கால்நடை நோய்க்காரணங்களை விவரிக்கும் இச்செயலி, சம்பவித்துள்ள குறிப்பிட்ட நோய்களின் தொற்றின் அடிப்படையில் நாட்டில் உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் மிக உயரிய ஆபத்துடையவை (Verh high Risk), உயரிய ஆபத்துடையவை (high Risk), மிதமான ஆபத்துடையவை (Moderate Risk), குறைந்த ஆபத்துடையவை (Low Risk) மிகக்குறைந்த ஆபத்துடையவை (Very low Risk) என வகைப்படுத்துவதால், வகைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கால்நடை நோய் கட்டுப்படுத்து பங்குதாரர்களால் திறனான முறையில் திட்டமிட்டு, கால்நடை தொற்றுகளை கட்டுப்படுத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்