கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (AHIDF) 2025-26 ஆம் நிதியாண்டு வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியானது உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (IDF) கீழ் 29,610.25 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
பால் பதப்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல், தயாரிப்புகளைப் பல்வகைப் படுத்துதல், கால்நடை தீவனத் தாவரங்கள், இனப் பெருக்கப் பண்ணைகள், விலங்கு கழிவுகளைப் பயன்படுத்திப் பொருட்கள் உருவாக்குதல், செயல்முறை மேலாண்மை (வேளாண் கழிவு மேலாண்மை), கால்நடை தடுப்பூசிகள் மற்றும் மருந்து உற்பத்தி வசதிகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட வங்கி மற்றும் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி மற்றும் தேசியப் பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் 90% வரையிலான கடனுக்கான இரண்டு வருட கால அவகாசம் உட்பட, எட்டு ஆண்டுகளுக்கு 3% வட்டி மானியத்தை அரசாங்கம் வழங்க உள்ளது.