TNPSC Thervupettagam

காளிங்கராயன் கால்வாய்

April 9 , 2019 2059 days 854 0
  • நெகிழ்வு மற்றும் தெர்மாக் கோல் கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் கோழிப் பண்ணைக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் தொடர்ந்து கொட்டப் படுவதால் ஈரோட்டில் உள்ள 736 ஆண்டுகள் பழமையான காளிங்கராயன் கால்வாய் மாசுபடுகின்றது.
  • 90.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வாயானது பவானியிலிருந்து கொடுமுடி வரை கால்வாயின் இரு புறங்களிலும் அமைந்துள்ள 15,743 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி அளிக்கிறது.
  • காளிங்கராயன் கால்வாயானது கொங்கு மண்டலத் தலைவரான காளிங்கராயன் என்பவரால் 1283 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
  • இந்தக் கால்வாயின் நீர் ஆதாரம் ஈரோட்டில் உள்ள பவானிக்கு அருகில் உள்ள காளிங்கராயன் அணையாகும்.
  • இந்தக் கால்வாயானது காவிரியின் இரண்டு முக்கியத் துணையாறுகளான பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றை இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்