பிரதமர் தலைமையிலான கேபினெட் அமைச்சரவை குழு 2017 முதல் 2020 ஆண்டுகளுக்கான காவற்படை பிரிவுகளின் நவீனமயமாக்கல் திட்டத்தின் (Modernisation of Polife Force) அமலாக்கத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மேம்பாடு, பெண்கள் பாதுகாப்பு, காவல் துறைக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள், கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு வாங்குதல், மின்னணு சிறை, காவலர்களின் இடப்பெயர்வு வசதி போன்ற பல சிறப்பு கூறுகள் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.
இத்திட்டத்தின் அமலாக்கம் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் அரசின் திறனை அதிகரிக்கும்.