TNPSC Thervupettagam

காவல்துறை கைதுகள் குறித்து உச்ச நீதிமன்றம்

April 7 , 2025 10 days 51 0
  • காவல்துறையானது, "அதன் வரம்புகளை மீற முடியாது" என்றும், மேலும் அவர்கள் கைது செய்யும் போது பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் விதிமுறைகளையும் கடை பிடிக்குமாறும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • நமது நாட்டின் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளியும் கூட, தனது தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக சில பாதுகாப்பு வசதிகளைப் பெறுவார்.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் காவல்துறையினருக்கு 2023 ஆம் ஆண்டு CrPC/BNSS சட்டத்தின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு விதிகளை கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒரு புதிய எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (பிரிவு 36 BNSS) 41(1)(b)(ii) என்ற ஒரு பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட "சரிபார்ப்புப் பட்டியலை" பின்பற்றுவதும் இதில் அடங்கும்.
  • சோம்நாத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசு (2023) ஆகியோருக்கு இடையிலான ஒரு வழக்கிலும் வழங்கப் பட்ட உச்ச நீதிமன்றத்தின் முந்தையத் தீர்ப்பானது இதே போன்ற கருத்துக்களைத் தெரிவித்தது.
  • அரசியலமைப்பின் 22வது சரத்து ஆனது, அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் தனி நபர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் சுதந்திரங்களையும் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்