இதன் செயல்பாடு தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
இது காவல்துறை மற்றும் பொது மக்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகக் காவல்துறை முன்னெடுப்பு ஆகும்.
இது 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப் பட்டது.
சமூகக் காவல் துறையின் கீழ் உள்ள அடிப்படைக் கொள்கை “ஒரு காவல் துறை அலுவலர் என்பவர் சீருடையுடன் உள்ள குடிமக்கள் ஆவர் மற்றும் குடிமக்கள் என்பவர் சீருடை அணியாத ஒரு காவல்துறை அலுவலர் ஆவர்” என்பதாகும்.