காவல்துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அக்டோபர் 21-ம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் காவல்துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
1959 ஆம் ஆண்டில் சீனாவுடனான எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த 10 காவல்துறை அதிகாரிகளின் தியாகத்தை இத்தினம் நினைவு படுத்துகின்றது.
1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் காவல்துறை பொது ஆய்வாளர்களின் (Inspector General of Police) வருடாந்திர மாநாட்டில் காவல் துறை நினைவு தினம் ஏற்படுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டிலிருந்து டெல்லியில் உள்ள சாணக்கியபுரியில் காவல் துறை நினைவகத்தில் தேசிய அளவிலான காவல்துறை நினைவு தின அணிவகுப்பு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.