TNPSC Thervupettagam

காவிரி நதி நீர் ஒதுக்கீடு 2024

August 6 , 2024 110 days 181 0
  • தமிழகம் மாநிலத்தில் ஜூலை மாதத்தின் போது காவிரி நதியில் அதிக அளவு நீர் வரத்து பதிவானது என்பதோடு அந்த மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நதி நீர் ஒதுக்கீடு மட்டுமின்றி மேலும் அதிகமான நீர் வரத்தும் பதிவானது.
  • ஜூலை 01 முதல் 31 ஆம் தேதி வரையில், இந்த மாநிலத்திற்கு 96.5 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) நீர் வரத்து என்பது பதிவானது.
  • ஜூன் மாதத்தில், நிர்ணயிக்கப்பட்ட 9.19 TMC நீருக்குப் பதிலாக 2.25 TMC நீர் வரத்தினை மட்டுமே தமிழ்நாடு பெற்றது.
  • மொத்தமாக, கடந்த இரண்டு மாதங்களில், தமிழகம் 40.43 TMC என்ற வழக்கமான நதி நீர் ஒதுக்கீட்டிற்குப் பதிலாக சுமார் 98.8 TMC நீர் வரத்தினைப் பெற்றுள்ளது.
  • ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 31.24 TMC நீரும், ஆகஸ்ட் மாதம் 45.95 TMC நீரும் வழங்கப் பட வேண்டும்.
  • காவிரி நதிநீர்ப் பிரச்சினை தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றம் மாற்றியமைத்தபடி, ஜூன் மாதம் முதல் ஒரு நீர் வழங்கீட்டு ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 TMC நீர் கிடைக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்