காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசானது முடிவு செய்துள்ளது.
முன்பு இது நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தது.
‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ மற்றும் ‘காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு’ ஆகியவற்றை உள்ளடக்கிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசானது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை உரிய மனப்பான்மையுடன் மேற்கொள்ளப் படுவதை உறுதி செய்யவே காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவானது அமைக்கப்பட்டது.