காவிரியில் இருந்து தமிழகத்துக்கு25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை வழங்கியது.
காவிரி நடுவர் மன்றமானது தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் இருப்பான 20 டி.எம்.சி நீரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த 20 டிஎம்சியில் 10 டிஎம்சியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகக் கூறி இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பெங்களூரின் குடிநீர் தேவை
பெங்களூருவின் குடிநீர் தேவை அதிகரித்திருப்பதாலும், அங்கு நிலத்தடி நீரின் அளவு மிகமிகக் குறைவான அளவில் இருப்பதாலும், நீர் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நடுவர் மன்றம், தமிழ்நாட்டின் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளது.
பெங்களூரு நகரமானது காவிரியாற்றின் வெளியிலமைந்திருந்த போதிலும் பெங்களூருவிற்கு75 டி.எம்.சி நீரை ஒதுக்கீடு செய்துள்ளது.
நதிநீர் தொடர்பான இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகள் வரையில் எவ்வித மாற்றமின்றி செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரி (7 டிஎம்சி) மற்றும் கேரளா (30 டிஎம்சி) ஆகியவற்றிற்கான நீர்ப்பகிர்வில் எந்தவொரு மாற்றமுமில்லை.
மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகள் “தேசியச் சொத்து“ எனவும், அவற்றின் மீது எந்த மாநிலமும் உரிமை கொள்ள அதிகாரம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
802 km நீளமுடைய காவிரி ஆற்றில் 70 டிஎம்சி நீர் சாதாரண நாட்களில் இருக்கும்.
இத்தீர்ப்பு இறுதியானதென்றும் மேல்முறையீடு செய்ய இயலாதென்றும் கூறியுள்ளது.