தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு தென்னிந்திய காவிரி ஆற்றுப் படுகை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு இடையேயான சச்சரவுகளற்ற நதிநீர் பங்கீடு மற்றும் விநியோகத்திற்கான மத்திய அரசின் காவிரி மேலாண்மை திட்ட வரைவிற்கு (Draft Cauvery Management Scheme) உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்சநீதி மன்றமானது 2007 ஆம் ஆண்டின் காவிரி நதி நீர் பிரச்சனைகளுக்கான தீர்ப்பாயத்தின் (Cauvery Water Disputes Tribunal-CWDT) தீர்ப்பினை மாற்றம் செய்துள்ளது. மேலும் எந்த ஒரு களத்தின் அடிப்படையிலும் இத்திட்டத்தின் அமல்பாட்டிற்கான கால அவகாசத்தை உச்ச நீதி மன்றம் நீட்டிக்காது என்பதையும் உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இத்திட்டமானது கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகியவற்றிற்கிடையே காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பானதாகும்.
இத்திட்டமானது காவிரி மேலாண்மை ஆணையத்தால் (Cauvery Management Authority-CMA) செயல்படுத்தப்படும். மேலும் இந்த காவிரி மேலாண்மை ஆணையமானது உச்ச நீதி மன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டவாறு காவிரி நதி நீர் பிரச்சனை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் ஒரே அமைப்பாகும் (sole body).
நிர்வாக ஆலாசனைகளை (administrative advisories) வழங்குவதைத் தவிர, இத்திட்டத்தின் அமல்பாட்டில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை.