TNPSC Thervupettagam

காவிரி வடக்கு வனவிலங்குச் சரணாலயத்தில் புலிகள்

February 7 , 2024 291 days 392 0
  • ஓசூர் காவிரி வடக்கு வனவிலங்குச் சரணாலயத்தில் உள்ள ஜவளகிரி மலைத் தொடரின் காப்புக்காடுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்படக் கருவியில் இரண்டு புலிகள் பதிவாகியுள்ளன.
  • ஜவளகிரி மலைத்தொடர் ஆனது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காவிரி தெற்கு வன விலங்குச் சரணாலயத்திற்கு அருகில் உள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இணையும் இடத்தில் அமைந்துள்ள மேலகிரி மலைத் தொடரின் வனவிலங்கு வழித் தடத்தின் வரம்பிற்குள் இந்தச் சரணாலயம் வருகிறது.
  • கர்நாடகாவின் பனேர்கட்டா தேசியப் பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப் பட்ட பகுதிகளில் காணப்படும் அதிகபட்சப் புலிகளுக்கு வாழ்விடமாக விளங்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இங்கு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்