இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தின் காவிரி நீரைப் பெறுவதில் இருந்த முந்தைய அனைத்துச் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் மே மாதத்திற்குள் மொத்தம் பெற்ற நீரின் அளவு 500 டிஎம்சி அடியைத் தாண்டும்.
மத்திய நீர் ஆணையம் (CWC) இதனை அறிவித்துள்ளது.
அளவீட்டுக்கானக் குறிப்புப் புள்ளியான பிலிகுண்டுலு நிலையம் CWC அமைப்பால் பராமரிக்கப் படுவதால் இதன் கணக்கீடுகள் மட்டுமே பரிசீலிக்கப்படுகின்றன.
ஏனெனில் 1974-75 ஆம் ஆண்டில் இருந்து கணக்கிடுகையில், 1975-76 ஆம் ஆண்டில் பெற்ற 455.4 டிஎம்சி அடி என்ற அளவில் பெற்ற நீரே அதிகபட்ச அளவாக இருந்தது.
இதுவே 2016 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டத் தொழில் நுட்பக் குழுவால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ஆகும்.
1978-79 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 400.6 டிஎம்சி அடி;1980-81 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 442.9 டிஎம்சி அடி; 1981-82 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 417 டிஎம்சி அடி; மற்றும் 2018-19 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 405.4 டிஎம்சி அடி.
நடப்பு ஆண்டில், ஓட்டு மொத்தமாகபெறப்பட்ட நீரின் அளவு நான்கு மாதங்களில் 450 டிஎம்சி அடி அளவை எட்டியுள்ளது.
அந்த நான்கு ஆண்டுகளில் தென்மேற்குப் பருவமழை முறையே 291 டிஎம்சி அடி, 342 டிஎம்சி அடி, 299 டிஎம்சி அடி மற்றும் 345 டிஎம்சி அடி நீரை அளித்தது.