TNPSC Thervupettagam

காவிரியில் குறைவான நீர்வரத்து

July 7 , 2023 508 days 299 0
  • கடந்த 10 ஆண்டுகளில் ஏழாவது முறையாக இந்த ஆண்டு ஜூன் மாதக் காவிரி நீர் வரத்து குறைவாக உள்ளது.
  • ஒரு மாதத்திற்கு வேண்டிய மாநிலத்திற்கு வழங்கப் படும் நீர்வரத்துப் பங்கினை விட  தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து என்பது குறைவாக உள்ளது.
  • ஜூன் மாதத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்து அளவு 9.19 ஆயிரம் மில்லியன் கன அடி (tmc ft) ஆகும்.
  • ஆனால் மாநிலம் 6.357 ஆயிரம் மில்லியன் கன அடிப் பற்றாக்குறையுடன், வெறும் 2.833 ஆயிரம் மில்லியன் கன அடி நீர்வரத்தினை மட்டுமே பெற்றுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அதிகபட்சமாக 16.5 ஆயிரம் மில்லியன் கன அடி நீர்வரத்தினை மாநிலம் பெற்றுள்ளது.
  • இந்த அளவானது, அதற்கான பங்கில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவில் நீர்வரத்தினைப் பெறுகின்ற நான்காவது முறையாகும்.
  • முன்னதாக 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளின் ஜூன் மாதங்களில் முறையே 2.854 ஆயிரம் மில்லியன் கன அடி, 0.77 ஆயிரம் மில்லியன் கன அடி மற்றும் 2.06 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருந்தது.
  • 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெற்ற 0.77 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வரத்து என்பது, கடந்த 10 ஆண்டுகளின் ஜூன் மாதத்திற்கான ஒரு நீர்வரத்தினை விட மிகவும்  குறைவான அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்