கடந்த 10 ஆண்டுகளில் ஏழாவது முறையாக இந்த ஆண்டு ஜூன் மாதக் காவிரி நீர் வரத்து குறைவாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு வேண்டிய மாநிலத்திற்கு வழங்கப் படும் நீர்வரத்துப் பங்கினை விட தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து என்பது குறைவாக உள்ளது.
ஜூன் மாதத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்து அளவு 9.19 ஆயிரம் மில்லியன் கன அடி (tmc ft) ஆகும்.
ஆனால் மாநிலம் 6.357 ஆயிரம் மில்லியன் கன அடிப் பற்றாக்குறையுடன், வெறும் 2.833 ஆயிரம் மில்லியன் கன அடி நீர்வரத்தினை மட்டுமே பெற்றுள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அதிகபட்சமாக 16.5 ஆயிரம் மில்லியன் கன அடி நீர்வரத்தினை மாநிலம் பெற்றுள்ளது.
இந்த அளவானது, அதற்கான பங்கில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவில் நீர்வரத்தினைப் பெறுகின்ற நான்காவது முறையாகும்.
முன்னதாக 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளின் ஜூன் மாதங்களில் முறையே 2.854 ஆயிரம் மில்லியன் கன அடி, 0.77 ஆயிரம் மில்லியன் கன அடி மற்றும் 2.06 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருந்தது.
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெற்ற 0.77 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வரத்து என்பது, கடந்த 10 ஆண்டுகளின் ஜூன் மாதத்திற்கான ஒரு நீர்வரத்தினை விட மிகவும் குறைவான அளவாகும்.