ஜனவரி மாதத்தில், கர்நாடகாவில் சொத்துப் பதிவுகளை நெறிப்படுத்தும் வலை தளம் அடிப்படையிலான ஒரு இணைய தளமான காவேரி 2.0, அவ்வப்போது, செயல்பாட்டு முடக்கம் சார்ந்த சேவையகக் கட்டமைப்புகளின் செயலிழப்புகளைச் சந்தித்தது.
இதன் விளைவாக, அந்த மாநிலத்தில் சொத்துப் பதிவு மற்றும் ஆவணம் தொடர்பான குடிமக்கள் சேவைகள் ஸ்தம்பித்தன.
இது ஒரு “Motivated Distributed Denial of Service (DDoS) -ஒருங்கிணைந்த இணையவெளித் தாக்குதல்” ஆகும்.
DDoS தாக்குதல் என்பது ஒரு இலக்கு வைக்கப்பட்ட சேவையகம், சேவை அல்லது வலை அமைப்பின் இயல்பான செயல்பாட்டை அதிகபட்ச இணையச் செயல்பாட்டின் மூலம் நிறைக்கச் செய்வதன் மூலம் அதனைச் சீர்குலைக்கச் செய்யும் ஒரு தீங்கிழைக்கும் நோக்கத்திலான முயற்சியாகும்.
பொதுவாக ஒரு மூலத்தை உள்ளடக்கிய சேவை மறுப்பு (DoS) தாக்குதலைப் போலன்றி, DDoS வகை தாக்குதலானது இணையச் செயல்பாட்டு நெரிசலை உருவாக்குவதற்காக பெரும்பாலும் தீம்பொருளால் பாதிக்கப்பட்ட பல கட்டுப்பாடு இழந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.
இந்தக் கட்டுப்பாடு இழந்த அமைப்புகள் கூட்டாக ஒரு தீம்பொருளால் பாதிக்கப்பட்ட கணினி வலையமைப்பு - போட்நெட் என்று அழைக்கப்படுகின்றன.