TNPSC Thervupettagam

காவேரி 2.0 தளம் மீதான DDoS தாக்குதல்

February 22 , 2025 10 hrs 0 min 17 0
  • ஜனவரி மாதத்தில், கர்நாடகாவில் சொத்துப் பதிவுகளை நெறிப்படுத்தும் வலை தளம் அடிப்படையிலான ஒரு இணைய தளமான காவேரி 2.0, அவ்வப்போது, செயல்பாட்டு ​முடக்கம் சார்ந்த சேவையகக் கட்டமைப்புகளின் செயலிழப்புகளைச் சந்தித்தது.
  • இதன் விளைவாக, அந்த மாநிலத்தில் சொத்துப் பதிவு மற்றும் ஆவணம் தொடர்பான குடிமக்கள் சேவைகள் ஸ்தம்பித்தன.
  • இது ஒரு “Motivated Distributed Denial of Service (DDoS) -ஒருங்கிணைந்த இணையவெளித் தாக்குதல்” ஆகும்.
  • DDoS தாக்குதல் என்பது ஒரு இலக்கு வைக்கப்பட்ட சேவையகம், சேவை அல்லது வலை அமைப்பின் இயல்பான செயல்பாட்டை அதிகபட்ச இணையச் செயல்பாட்டின் மூலம் நிறைக்கச் செய்வதன் மூலம் அதனைச் சீர்குலைக்கச் செய்யும் ஒரு தீங்கிழைக்கும் நோக்கத்திலான முயற்சியாகும்.
  • பொதுவாக ஒரு மூலத்தை உள்ளடக்கிய சேவை மறுப்பு (DoS) தாக்குதலைப் போலன்றி, DDoS வகை தாக்குதலானது இணையச் செயல்பாட்டு நெரிசலை உருவாக்குவதற்காக பெரும்பாலும் தீம்பொருளால் பாதிக்கப்பட்ட பல கட்டுப்பாடு இழந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்தக் கட்டுப்பாடு இழந்த அமைப்புகள் கூட்டாக ஒரு தீம்பொருளால் பாதிக்கப்பட்ட கணினி வலையமைப்பு - போட்நெட் என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்