உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டினுள் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றச் செய்வதற்காக வேண்டி இந்திய அரசு "காவேரி” என்ற நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
சுமார் 3,000 பொதுமக்களை வெளியே கொண்டு வருவதற்காக, சூடானில் அறிவிக்கப் பட்டுள்ள 72 மணி நேர போர் நிறுத்தத்தினைத் தற்போது இந்திய அரசாங்கம் நன்கு பயன்படுத்தி வருகிறது.
இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படையை உள்ளடக்கிய இந்த முக்கிய நடவடிக்கையின் ஒருங்கிணைப்புப் பணிகளானது இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.