TNPSC Thervupettagam
June 9 , 2018 2232 days 671 0
  • பேரிடர் கண்காணிப்பு (disaster monitoring) மற்றும் வேளாண் மூல ஆதாரங்களின் ஆராய்ச்சியில் முக்கியமாகப் பயன்படும் காவோபென்-6 (Gaofen-6) எனும் புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளை (Earth observation satellite) சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
  • வடமேற்கு சீனாவின் ஜியுக்வான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து (Jiuquan Satellite Launch Centre) லாங்-மார்ச்-2D இராக்கெட் மூலம் காவோபென்-6 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
  • காவோபென்-6 செயற்கைக்கோள்கள் ஆனது சீன உயர்-தெளிவுத் திறனுடைய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (China High-resolution Earth Observation System-CHEOS) அமைப்புத் தொடரின் புதிய செயற்கைக்கோளாகும்.
  • இந்த செயற்கைக்கோளானது விண்வெளித் தொழிற்நுட்பத்திற்கான சீன அகாடமியால் (China Academy of Space Technology- CAST) மேம்படுத்தப்பட்டதாகும். இது சீனாவின் ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷனின் (China Aerospace Science and Technology Corporation-CASC) துணை நிறுவனமாகும்.
  • மேலும் இந்தச் செயற்கைக்கோளுடன் இணைந்து லுவோஜியா-1 (Luojia-1) எனும் அறிவியல் பரிசோதனை செயற்கைக்கோளும் (scientific experiment satellite) விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்